< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசிய புஜாரா
|14 Aug 2022 1:13 AM IST
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் சஸ்செக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதன் ஒரு பகுதியாக ராயல் லண்டன் கோப்பைக்கான உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் வார்விக் ஷைர் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் களம் இறங்கினார். டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட 34 வயதான புஜாரா அதற்கு நேர்மாறாக அதிரடி காட்டி வியப்பூட்டினார். இறுதி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் லியாம் நார்வெல்லின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 22 ரன்கள் நொறுக்கிய அவர் 107 ரன்கள் (79 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது சதத்துக்கு பலன் கிடைக்கவில்லை. 311 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சஸ்செக்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.