< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டிஎன்பிஎல் வெளியேற்றுதல் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்
|31 July 2024 5:38 AM IST
வெளியேற்றுதல் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் அணிகள் இன்று மோதுகின்றன.
திண்டுக்கல்,
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் திருப்பூரை வீழ்த்தி கோவை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்த நிலையில், திண்டுக்கல் நத்தத்தில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன.
இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் தமிழன்சுடன் மோதும். இந்த ஆட்டம் வருகிற 2-ந்தேதி சென்னையில் நடைபெறும். தோற்கும் அணி, தொடரை விட்டு வெளியேறும்.