< Back
கிரிக்கெட்
பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு
கிரிக்கெட்

பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
18 May 2024 7:03 PM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் விளையாடுகின்றன.

பெங்களூரு,

ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4-வது அணி எது? என்பதை தீர்மானிக்கும் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்சும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-

சென்னை: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரகானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா

பெங்களூரு: பாப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கர்ண் சர்மா, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்

மேலும் செய்திகள்