< Back
கிரிக்கெட்
துஷார் தேஷ்பாண்டேவின் பிறந்தநாளை கொண்டாடிய  சென்னை  அணியினர்
கிரிக்கெட்

துஷார் தேஷ்பாண்டேவின் பிறந்தநாளை கொண்டாடிய சென்னை அணியினர்

தினத்தந்தி
|
15 May 2024 9:16 PM IST

துஷார் தேஷ்பாண்டே இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

சென்னை,

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 லீக் போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு சென்னை, ஐதராபாத், டெல்லி, லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய 5 அணிகளுக்கிடையே போட்டி காணப்படுகின்றது.

சென்னை அணி 18ம் தேதி நடைபெற உள்ள முக்கியமான ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. இதில் வெற்றிபெற்றால் சென்னை அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இந்த போட்டிக்காக சென்னை அணி வீரர்கள் இன்று பெங்களூரு சென்றனர். அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . துஷார் தேஷ்பாண்டேவின் பிறந்தநாளை சென்னை அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்