< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
வித்தியாசமான ஷாட்: கீப்பர் தலைக்கு மேல் சிக்சர் பறக்கவிட்ட டோனி
|19 April 2024 9:28 PM IST
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி பறக்கவிட்ட சிக்சர் வீடியோ வைரலாகி வருகிறது.
லக்னோ,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூபர் ஜெயண்ட்ஸ் மோதி வருகின்றன. லக்னோவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
இதில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 57 ரன்கள் குவித்தார்.
இப்போட்டியில் டோனி விளாசிய சிக்சர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 18.2 ஓவரில் மோசின்கான் வீசிய பந்தை டோனி கீப்பர் தலைக்கு மேலே சிக்சராக பறக்கவிட்டார். டோனி 9 பந்துகளில் 28 ரன்கள் விளாசி ஜடேஜாவுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான முறையில் டோனி விளாசிய சிக்சர் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.