மீண்டும் ஏமாற்றம் அளித்த டேரில் மிட்செல்; 11 ரன்களில் அவுட்
|லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டேரில் மிட்செல் 11 ரன்களில் அவுட் ஆனார்.
சென்னை,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் 39வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதி வருகின்றன.
இதில், டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை தொடக்க வீரர்களாக ரஹானே, ருதுராஜ் கெய்குவாட் களமிறங்கினர். 3 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த ரஹானே முதல் ஓவரைலேயே அவுட் ஆனார்.
அடுத்து டேரில் மிட்செல் களமிறங்கினார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் டேரில் மிட்செல் சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. இதற்கு முந்தைய ஆட்டங்களில் மிட்செல் மிகவும் குறைவாகவே ரன்கள் எடுத்திருந்தார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஏற்கனவே 6 ஆட்டங்களில் ஆடியுள்ள மிட்செல் 135 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இன்றைய ஆட்டத்தில் மிட்செல் 10 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 7 ஆட்டங்களில் ஆடியுள்ள மிட்சேல் அடித்த ரன்கள் விவரம்:-
பெங்களூருவுக்கு எதிராக 22 ரன்கள் (18 பந்துகள்)
குஜராத்திற்கு எதிராக 24 ரன்கள் (20 பந்துகள்)
டெல்லிக்கு எதிராக 34 ரன்கள் (26 பந்துகள்)
ஐதராபாத்திற்கு எதிராக 13 ரன்கள் (11 பந்துகள்)
கொல்கத்தாவுக்கு எதிராக 25 ரன்கள் (19 பந்துகள்)
மும்பைக்கு எதிராக 17 ரன்கள் (14 பந்துகள்)
லக்னோவுக்கு எதிராக 11 ரன்கள் (10 பந்துகள் - இன்றைய ஆட்டம்)