< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
சேப்பாக்கத்தில் சென்னை-ராஜஸ்தான் ஆட்டம்; நீண்ட வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்
|9 April 2023 10:37 PM IST
சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் நீண்ட வரிசைகளில் நின்று டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
சென்னை,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஐ.பி.எல். லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நடைபெற்றது.
டிக்கெட்டுகளை வாங்குவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே இரவு முதலே ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், காலை 9.30 மணியளவில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. இதில் ரசிகர்கள் நீண்ட வரிசைகளில் நின்று டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
அங்குள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி,டி, இ கீழ்தளம்) டிக்கெட்கள், ரூ.2,000, ரூ.2,500 விலைக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ரூ,3,000 விலைக்குரிய டிக்கெட் (டி, இ மேல்தளம்) ஆன்லைன் விற்பனை செய்யப்பட்டது.