< Back
கிரிக்கெட்
2024-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் முறையில் மாற்றம்
கிரிக்கெட்

2024-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் முறையில் மாற்றம்

தினத்தந்தி
|
23 Nov 2022 1:51 AM IST

உலக கோப்பை போட்டிக்கு ஏற்கனவே 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன.

துபாய்,

சமீபத்தில் நடந்த 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது. 9-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா நாடுகள் இணைந்து 2024-ம் ஆண்டில் நடத்துகின்றன.

முந்தைய இரு உலக கோப்பை போட்டிகள் முதல் சுற்று, அதன் பிறகு சூப்பர்12 சுற்று, அரைஇறுதி, இறுதிப்போட்டி என்ற முறையில் நடத்தப்பட்டன. ஆனால் 2024-ம் ஆண்டு உலக கோப்பை ஆட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த உலக கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் டாப்2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர்8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும். அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

இந்த போட்டிக்கு ஏற்கனவே 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று மூலம் முடிவாகும்.

மேலும் செய்திகள்