< Back
கிரிக்கெட்
சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோகித்துடன் இவர்தான் தொடக்க வீரராக களம் இறங்குவார் - தினேஷ் கார்த்திக்

image courtesy: twitter/@BCCI

கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோகித்துடன் இவர்தான் தொடக்க வீரராக களம் இறங்குவார் - தினேஷ் கார்த்திக்

தினத்தந்தி
|
20 Aug 2024 7:43 PM IST

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணியினர் தீவிரமாக தயாராகி வருகின்றர்.

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித்துடன் தொடக்க வீரராக கில் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் யார் களம் இறங்குவார்கள்? என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில்தான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

ரோகித் - கில் ஆகியோர் நல்ல கலவை. ஆம். ஜெய்ஸ்வால் பேக்-அப் துவக்க வீரராக விளையாடுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது. சொல்லப்போனால் சுப்மன் கில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை எனில் அவர் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை விரைவாக பெறுவார்.

இந்திய அணியில் ஏற்கனவே ஓரளவு இதமான மிடில் ஆர்டர் இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் நாம் இன்னும் 3 போட்டிகளில் விளையாட உள்ளோம். எனவே சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது

மேலும் செய்திகள்