< Back
கிரிக்கெட்
முதல்முறையாக ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கனடா அணி..!!

image courtesy; ICC

கிரிக்கெட்

முதல்முறையாக ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கனடா அணி..!!

தினத்தந்தி
|
9 Oct 2023 9:07 AM IST

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கனடா அணி தகுதி பெற்றுள்ளது.

டொராண்டோ,

9-வது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. அதில் ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

மற்ற அணிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பெர்முடாவின் ஹாமில்டனில் நடைபெற்ற அமெரிக்க பிராந்திய தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் பெர்முடா மற்றும் கனடா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கனடா முதலில் பேட்டிங் செய்து 132 ரன்கள் எடுத்தது. பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெர்முடா அணி கனடா வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.5 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் கனடா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கனடா அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு கனடா அணி தகுதி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்