பட்லர்-ஜெய்ஸ்வால் அரைசதம்: டெல்லிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்...!
|ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் பட்லர், ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினர்.
கவுகாத்தி,
ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 5 பவுண்டரிகள் அடித்து அசத்தினார் ஜெய்ஸ்வால். இந்த இணை டெல்லி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் - பட்லர் இணை முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 60 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய சாம்சன் 0 ரன், ரியான் பராக் 7 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து பட்லருடன் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மையர் இணைந்தார்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பட்லர் 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யலாம் என்ற நிலையில் டெல்லி ஆட உள்ளது.