ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாட வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
|இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் உள்ளார்.
மும்பை,
நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்ற இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்ப்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலையில் இந்திய அணி ஆட உள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். காயத்திற்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர், இந்திய அணியின் முக்கியமான கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பும்ரா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அவர் அடிக்கடி காயம் அடைவதால் அவரது உடற்தகுதியை சீராக வைத்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அற்வுறுத்தி உள்ளது. மேலும் இந்த வருட இறுதியில் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடுவதை தவிர்க்கவும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஜஸ்ப்ரித் பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும். ஏனெனில் அதன் மூலம் அவரது தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் டெல்லி, தர்மசாலா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கின்றன. டெஸ்ட் தொடரை தொடர்ந்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளது.