< Back
கிரிக்கெட்
இங்கிலாந்து பேட்ஸ்மேனை சீண்டிய பும்ரா: ஐசிசி கண்டனம்
கிரிக்கெட்

இங்கிலாந்து பேட்ஸ்மேனை சீண்டிய பும்ரா: ஐசிசி கண்டனம்

தினத்தந்தி
|
29 Jan 2024 5:17 PM IST

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐதராபாத்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆட்டத்தில் 81-வது ஓவரை பும்ரா வீச வந்தார். அந்த ஓவரில் ஒல்லி போப் ரன்களை எடுப்பதற்காக ஓடியபோது வேண்டுமென்றே அவரது பாதையில் பும்ரா குறுக்கிட்டார். ஒல்லி போப்பை சீண்டும் வகையில் நடந்துகொண்ட பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஐசிசி விதிமுறையில் லெவல் 1 ஐ மீறியதாக அவருக்கு நன்னடத்தை குறைபாடுக்கான புள்ளியும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்