< Back
கிரிக்கெட்
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த பும்ரா, மார்க்ரம்
கிரிக்கெட்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த பும்ரா, மார்க்ரம்

தினத்தந்தி
|
5 Jan 2024 1:45 AM IST

தென் ஆப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 176 ரன்னில் அடங்கியது. எனினும், மார்க்ரம் சதம் அடித்தார். அவருக்கு அடுத்து அதிகபட்சமாக பெடிங்காம், யான்சென் தலா 11 ரன் எடுத்தனர். அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 12 ரன்னை கூட தாண்டாத ஒரு இன்னிங்சில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மார்க்ரம் பெற்றார்.

அதேபோல, போட்டியின் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அறுவடை செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் எடுப்பது இது 9-வது முறையாகும். இதில் ஆசிய கண்டத்துக்கு வெளியே மட்டும் 8 முறை இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். ஆசியாவுக்கு வெளியே அதிக தடவை 5 விக்கெட் வீழ்த்திய இந்தியர்களில் கபில்தேவுக்கு (9 முறை) அடுத்த இடத்தை சந்திரசேகர், இஷாந்த் ஷர்மா, கும்பிளே (தலா 8 முறை) ஆகியோருடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்