< Back
கிரிக்கெட்
பும்ரா, கே.எல். ராகுல் விலகல்.. 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்

image courtesy; twitter/@BCCI

கிரிக்கெட்

பும்ரா, கே.எல். ராகுல் விலகல்.. 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்

தினத்தந்தி
|
21 Feb 2024 11:14 AM IST

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

ராஞ்சி,

இங்கிலாந்துக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் ஆகியோர் விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

பணிச்சுமை கருதி பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும் பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் விலகிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரேல், கே.எஸ்.பாரத், படிக்கல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அகாஷ் தீப்.

மேலும் செய்திகள்