< Back
கிரிக்கெட்
பும்ரா ஒரு போட்டியாளர் மட்டுமல்ல...நான் எப்போதும்.. - ஹர்ஷல் படேல்
கிரிக்கெட்

பும்ரா ஒரு போட்டியாளர் மட்டுமல்ல...நான் எப்போதும்.. - ஹர்ஷல் படேல்

தினத்தந்தி
|
16 May 2024 8:19 PM IST

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஊதா நிற தொப்பியை கைப்பற்றுவதில் பும்ரா, ஹர்ஷல் இடையே போட்டி நிலவுகிறது.

கவுகாத்தி,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 48 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாம் கர்ரண், ஹர்ஷல் படேல் மற்றும் ராகுல் சஹார் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 2 விக்கெட்டுகளையும் சேர்த்து நடப்பு சீசனில் ஹர்ஷல் படேல் மொத்தமாக 22 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதனால் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ராவை (20) முந்திய ஹர்ஷல் படேல் ஊதா தொப்பியை தன் வசமாக்கியுள்ளார்.

இந்நிலையில் பும்ராவை தம்முடைய போட்டியாளராக நினைப்பதாக ஹர்ஷல் படேல் தெரிவித்துள்ளார். மேலும் அவரை பின்பற்றி அவரையே முந்தி ஊதா தொப்பியை வென்றுள்ளது பெருமிதம் அளிப்பதாக தெரிவிக்கும் ஹர்ஷல் படேல் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"பும்ரா ஒரு போட்டியாளர் மட்டுமல்ல. நான் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர். நான் எப்போதும் அவரைப் போல் நன்றாக செயல்படுவதற்கு ஆசைப்படுகிறேன். ஊதா நிற தொப்பியை வெல்வதற்கான போட்டியில் நாங்கள் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. யார்கர் பந்துகளை வெற்றிகரமாக செயல்படுத்துவது மிகவும் கடினமாகும். ஆனால் அந்தப் பந்தில் எனக்கு நிறைய தன்னம்பிக்கை இருக்கிறது. அதை அழுத்தமான சூழ்நிலையில் நான் வீச வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்