< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மும்பை அணி வீரர்களை உற்சாகப்படுத்த மைதானம் வந்த பும்ரா!
|25 April 2023 11:34 PM IST
இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத்- மும்பை அணிகள் மோதின.
அகமதாபாத்,
ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 208 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.
இதனிடையே காயம் காரணமாக விலகியிருக்கும் மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, மும்பை அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்தார். அவர் மைதானத்திற்கு வருகை தந்திருந்த புகைப்படத்தை மும்பை அணி தன்னுடைய டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.