< Back
கிரிக்கெட்
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த பந்துவீச்சாளரும் படைத்திடாத சாதனை படைத்த பும்ரா

image courtesy; twitter/@BCCI

கிரிக்கெட்

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த பந்துவீச்சாளரும் படைத்திடாத சாதனை படைத்த பும்ரா

தினத்தந்தி
|
8 Feb 2024 2:25 PM IST

ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

புதுடெல்லி,

இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா சிறப்பாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் மற்றும் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

அதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் அஸ்வினை பின்னுக்கு தள்ளி மற்றொரு இந்திய வீரரான பும்ரா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த பந்துவீச்சாளரும் படைத்திடாத சாதனையை பும்ரா படைத்துள்ளார். அதாவது 3 வடிவிலான போட்டிகளிலும் நம்பர் 1 இடத்தை அலங்கரித்த முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முந்தைய காலங்களில் பும்ரா முதலிடத்தை அலங்கரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்