புச்சிபாபு கிரிக்கெட்: கேரளா 218 ரன்னில் ஆல்-அவுட்
|தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- இந்தியன் ரெயில்வே (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் கோவையில் நேற்று தொடங்கியது.
கோவை,
புச்சிபாபு நினைவு அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நேற்று தொடங்கியது. நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடக்கும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- இந்தியன் ரெயில்வே (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியன் ரெயில்வே அணி 87 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்துள்ளது. நிஷாந்த் குஷ்வா (106 ரன்) சதம் அடித்தார்.
நெல்லையில் நடக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவனுக்கு எதிரான ஆட்டத்தில் (டி பிரிவு) முதலில் பேட் செய்த கேரளா முதல் இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 218 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் சித்தார்த் 3 விக்கெட்டும், சரணகுமார், அஜய் கிருஷ்ணா, ஷாருக்கான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன் எடுத்துள்ளது. இன்று 2-வதுநாள் ஆட்டம் நடைபெறும்.