புச்சி பாபு கிரிக்கெட் தொடர்; சுனில் நரேன் ஸ்டைலில் பந்துவீசிய ஸ்ரேயாஸ் ஐயர் - வீடியோ
|ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுனில் நரேன் இருவரும் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை,
புச்சிபாபு கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 12 அணிகள் ஆடி வருகின்றன. இந்த தொடரில் இந்திய சீனியர் வீரர்கள் பலரும் ஆடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் கோவையில் நேற்று தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை - டி.என்.சி.ஏ லெவன் அணிகள் ஆடி வருகின்றன. இந்த போட்டியில் மும்பை அணியில் விளையாடும் சீனியர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசினார்.
அவர் சுனில் நரைன் ஸ்டைலில் பந்து வீசினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு ஓவர் பந்துவீசிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிக்சர் உட்பட மொத்தம் 7 ரன்கள் கொடுத்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுனில் நரேன் இருவரும் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.