< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பிரிஸ்பேன் ஆடுகளம் பேட்டிங், பந்துவீச்சுக்கு சரிசம போட்டி அளிக்கும் வகையில் இல்லை: ஐ.சி.சி. விமர்சனம்
|21 Dec 2022 12:59 AM IST
பிரிஸ்பேன் ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரிசம போட்டி அளிக்கும் வகையில் இல்லை.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி வெறும் 2 நாளில் முடிவுக்கு வந்தது.
இந்த ஆடுகளத்தன்மை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'இந்த டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கே மிக, மிக சாதகமாக இருந்தது.
ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரிசம போட்டி அளிக்கும் வகையில் இல்லை. எனவே ஐ.சி.சி.யின் வழிகாட்டுதலின் படி இந்த ஆடுகளத் தன்மையை சராசரிக்கும் குறைவானது என்று கண்டறிந்துள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.