< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பைக்கான இந்திய அணி இறுதி செய்யப்பட்டது...? - சஞ்சு சாம்சன், திலக் வர்மாவுக்கு இடம் இல்லை...!
கிரிக்கெட்

உலகக்கோப்பைக்கான இந்திய அணி இறுதி செய்யப்பட்டது...? - சஞ்சு சாம்சன், திலக் வர்மாவுக்கு இடம் இல்லை...!

தினத்தந்தி
|
3 Sept 2023 12:23 PM IST

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த உலகக்கோப்பை தொடருக்கான முதன்மை அணிகளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கு பின்னர் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் இலங்கையில் சந்தித்து பேசியதாவும், அப்போது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செயயப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரிசர்வ் வீரராக உள்ள சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடம் அளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்ஸ்மேன்களாகவும், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் விக்கெட் கீப்பர்களாகவும், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாகவும், குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளராகவும், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2023 உலகக் கோப்பைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி.

மேலும் செய்திகள்