< Back
கிரிக்கெட்
டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்த இரு அணிகள் முன்னேறும் - கிறிஸ் கெய்ல்

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்த இரு அணிகள் முன்னேறும் - கிறிஸ் கெய்ல்

தினத்தந்தி
|
10 Oct 2022 4:41 PM IST

டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்த இரு அணிகள் தான் விளையாடும் என கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.


8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்த அரு அணிகள் விளையாட வாய்ப்பு உள்ளதாக வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, என்னை பொறுத்தவரை டி20 உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கைரன் பொல்லார்ட், ரசல் மற்றும் பிராவோ இல்லாதது அணிக்கு மிகப்பரிய இழப்பு தான் , அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். அவர்கள் மற்ற அணிகளுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் என நிரூபிக்க முடியும்.

போட்டி நாளில் உங்களது திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்