< Back
கிரிக்கெட்
விராட்கோலியை தான் இந்திய அணி அதிகம் நம்பி இருக்கிறது - கிரேக் சேப்பல் கருத்து
கிரிக்கெட்

விராட்கோலியை தான் இந்திய அணி அதிகம் நம்பி இருக்கிறது - கிரேக் சேப்பல் கருத்து

தினத்தந்தி
|
5 Feb 2023 5:22 AM IST

முன்னணி வீரர்கள் காயத்தால் சிக்கி தவிப்பதால் இந்திய டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியால் வெல்ல முடியும் என்று கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் இந்திய டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'முக்கியமான வீரர்களான ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தால் சிக்கி தவிப்பதால் இந்திய அணி சொந்த மண்ணில் பாதிப்பை சந்திக்கக்கூடும். இதனால் இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியால் வெல்ல முடியும்.

விராட்கோலியை தான் இந்திய அணி அதிகம் நம்பி இருக்கிறது. இந்திய ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் உடனடியாக மாற வேண்டியது அவசியமானதாகும். ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். எனவே ஆஷடன் அகருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். இந்திய தொடரில் வெற்றி பெறுவதற்கு நல்ல திட்டமிடுதலுடன், பொறுமையும், விடாமுயற்சியும் அவசியமானதாகும்' என்றார்.

மேலும் செய்திகள்