பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்; மைதானங்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா
|இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
கான்பெர்ரா,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர் - கவாஸ்கர் தொடர்) ஆட உள்ளது. பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்த முறை 5 ஆட்டங்கள் கொண்ட தொடராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பார்டர் - கவாஸ்கர் தொடரின் போட்டிகள் எந்தெந்த மைதானங்களில் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் பெர்த்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
2வது போட்டியான பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 3வது போட்டி டிசம்பர் 14ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்திலும், 4வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்திலும், 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி சிட்னி மைதானத்திலும் தொடங்குகிறது.
2024-25 ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம் அட்டவணை:
முதல் டெஸ்ட்: நவம்பர் 22-26, பெர்த்
2வது டெஸ்ட்: டிசம்பர் 6-10, அடிலெய்டு (பகல்-இரவு ஆட்டம்)
3வது டெஸ்ட்: டிசம்பர் 14-18, பிரிஸ்பேன்
4வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன் (பாக்ஸிங் டே டெஸ்ட்)
5வது டெஸ்ட்: ஜனவரி (2025) 3-7, சிட்னி