50-வது பிறந்த நாள்: தெண்டுல்கருக்கு ஐ.சி.சி. வாழ்த்து
|50-வது பிறந்த நாளையொட்டி இந்திய முன்னாள் கேப்டன் தெண்டுல்கருக்கு ஐ.சி.சி. வாழ்த்து தெரிவித்தது.
மும்பை,
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடித்தவரும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவருமான இந்திய முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கருக்கு நேற்று 50-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் எளியமுறையில் கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி தெண்டுல்கருக்கு, முன்னாள் வீரர்கள் ரவிசாஸ்திரி, ஷேவாக், யுவராஜ் சிங், வி.வி.எஸ்.லட்சுமண், ஹர்பஜன் சிங் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சமூக வலைதளத்தில் தெண்டுல்கரின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. தனது வாழ்த்து செய்தியில், 'பல வருடங்கள் கிரிக்கெட் ஜாம்பவனாக விளங்கும் சச்சின் தெண்டுல்கருக்கு மற்றொரு அரைசதம்' என்று குறிப்பிட்டுள்ளது.