< Back
கிரிக்கெட்
20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணி செப்டம்பர் 15 ஆம் தேதி தேர்வு?- வெளியான தகவல்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணி செப்டம்பர் 15 ஆம் தேதி தேர்வு?- வெளியான தகவல்

தினத்தந்தி
|
21 Aug 2022 11:05 PM IST

ஆசிய கோப்பைப் போட்டியின் அடிப்படையில் உலக கோப்பைக்கான அணி தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை,

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ம் தேதி மோதுகிறது. 27 மற்றும் நவம்பர் 6-ம் தகுதி சுற்று அணிகளுடனும், அக்டோபர் 30-ம் தேதி, தென் ஆப்பிரிக்காவுடனும், நவம்பர் 2-ம் தேதி வங்காளதேசத்துடனும் மோதுகிறது.

இந்த நிலையில் டி 20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் செப்டம்பர் 15-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஒவ்வொரு அணியில் 15 வீரர்கள் உள்பட 23 பேரை வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வீரர்களில் இருந்து தான் போட்டியில் பங்கேற்க இயலும். மருத்துவ காரணங்களுக்காக மட்டும் வீரர்களை மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பைப் போட்டியின் அடிப்படையில் உலக கோப்பைக்கான அணி தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்