குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்
|குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆமதாபாத்,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான குஜராத் ஜெயன்ட்ஸ் நிர்வாகம், தங்கள் அணியின் கேப்டன் யார் என்ற விவரத்தை நேற்று அறிவித்தது.
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் 74 ரன்கள் விளாசி ஆட்டநாயகியாக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் பெத் மூனி குஜராத் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளது.
ஏலத்தில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட 29 வயதான பெத் மூனி வெளிநாட்டு லீக் போட்டியில் ஒரு அணியை வழிநடத்த இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்திய ஆல்-ரவுண்டர் சினே ராணா துணை கேப்டனாக பணியாற்ற இருக்கிறார்.
டபிள்யூ.பி.எல். லீக்கில் 4-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் அணி மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.