< Back
கிரிக்கெட்
தோனியுடன் விளையாடிய காலகட்டம் மிகவும் மகிழ்ச்சியானது: விராட் கோலி நெகிழ்ச்சி
கிரிக்கெட்

தோனியுடன் விளையாடிய காலகட்டம் மிகவும் மகிழ்ச்சியானது: விராட் கோலி நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
26 Aug 2022 11:36 AM IST

இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, தன்னுடைய டுவீட்டரில் தோனியுடன் விளையாடியது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார்.

துபாய்,

இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் வரும் 28 ஆம் தேதி மோத உள்ளது.

சமீப காலமாக பார்ம் இல்லாமல் தவித்து வரும் கோலி, இந்த தொடரிலாவது சதமடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவாரா என்ற எண்ணம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், விராட் கோலி தன்னுடைய டுவீட்டரில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார். அதில், அவர்,

"தோனியுடன் நம்பிக்கையுரிய பார்ட்னராக இருந்தது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மகிழ்ச்சிகமான மற்றும் உற்சாகமான காலகட்டமாகும். எங்கள் கூட்டணி எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது ஜெர்சி எண்ணையும், தோனியின் ஜெர்சி எண்ணையும் குறிப்பிட்டு தோனியும், தானும் விளையாடிய போது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலியின் இந்த பதிவு டுவீட்டரில் 2லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்