குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சு தேர்வு
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் விளையாடுகின்றன.
பெங்களூரு,
அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி குஜராத் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பிவருமாறு:-
குஜராத்: விருத்திமான் சஹா, சுப்மன் கில்(கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ஷாருக் கான், ராகுல் திவேட்டியா, ரஷித் கான், மானவ் சுதர், நூர் அகமது, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்
பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளெஸ்சிஸ்(கேப்டன்), வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், கரண் சர்மா, ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜய்குமார் வைஷாக்