பெங்களூரு அணி கேப்டன் டு பிளஸ்சிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!
|பெங்களூரு அணி கேப்டன் டு பிளஸ்சிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்தித்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து 213 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது.
லக்னோஅணியின் அதிக பட்ச சேசிங் இதுதான். 4-வது லீக்கில் ஆடிய லக்னோவுக்கு இது 3-வது வெற்றியாகும். பெங்களூருவுக்கு இது 2-வது தோல்வியாகும்.
இந்த நிலையில், பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளிஸ்சிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் டு பிளிஸ்சிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.