< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய அணியை கலாய்த்த பென் ஸ்டோக்ஸ்... காரணம் என்ன..?
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியை கலாய்த்த பென் ஸ்டோக்ஸ்... காரணம் என்ன..?

தினத்தந்தி
|
17 Sept 2024 7:23 AM IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

லண்டன்,

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்றது.

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கடந்த 15-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு இடைவிடாது மழை பெய்ததான் காரணமாக ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவை கலாய்த்துள்ளார். குறிப்பாக கடைசிப் போட்டியில் மழை வந்ததால் ஆஸ்திரேலியா தப்பித்ததாகவும் இல்லையேல் இங்கிலாந்து வென்றிருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-"மான்செஸ்டரில் மழை. இங்கே ஆஸ்திரேலியா அதிர்ஷ்டம் செய்துள்ளது என்று நினைக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

அதனுடன் மான்செஸ்டர் மைதானம் மழையால் மூடப்பட்டிருக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் தெரியும் புகைப்படம் எடுத்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு சிரிக்கும் எமோஜியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்