உலகக் கோப்பை ஒருநாள் போட்டிக்காக மீண்டும் அணிக்கு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்
|பென் ஸ்டோக்ஸை ஓய்வில் இருந்து திரும்பி வருமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லண்டன்,
எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடுமாறு பென் ஸ்டோக்சிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஒருநாள் போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், பென் ஸ்டோக்சை ஓய்வில் இருந்து திரும்பி வருமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் பயிற்சியாளர் மேத்யூ மோட்டும், ஸ்டோக்ஸ் திரும்பி வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பென் ஸ்டோக்ஸ் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மொயீன் அலியை சமீபத்திய ஆஷஸ் தொடருக்கான டெஸ்ட் ஓய்விலிருந்து அணிக்கு மீண்டும் திரும்பும்படி பென் ஸ்டோக்ஸ் கேட்டுக்கொண்டார். இதேபோல உலகக் கோப்பை போட்டிக்காக பென் ஸ்டோக்சிடமிருந்து இதே போன்ற ஒரு அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.