< Back
கிரிக்கெட்
கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்ய பென் ஸ்டோக்ஸ் முடிவு?
கிரிக்கெட்

கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்ய பென் ஸ்டோக்ஸ் முடிவு?

தினத்தந்தி
|
9 Sept 2023 3:04 AM IST

பென் ஸ்டோக்ஸ் ஆபரேஷன் செய்தால், அதில் இருந்து முழுமையாக குணமடைய 8 முதல் 12 வாரங்கள் ஆகும்.

கார்டிப்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், டெஸ்ட் கேப்டனுமான 32 வயதான பென் ஸ்டோக்சுக்கு இடது கால்முட்டியில் நீண்ட காலமாக பிரச்சினை இருக்கிறது. இதனால் பந்து வீசுவதில் தடுமாற்றம் அடைகிறார். இந்தியாவில் அடுத்த மாதம் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள அவர் அதன் பிறகு கால்முட்டி வலிக்கு தீர்வு காண்பேன், இதற்காக மருத்துவ நிபுணர்களுடன் பேசி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

அனேகமாக அவர் ஆபரேஷன் செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. அவ்வாறு செய்தால் அதில் இருந்து முழுமையாக குணமடைய 8 முதல் 12 வாரங்கள் ஆகும். ஜனவரி 25-ந்தேதி இந்தியாவில் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சிக்கலாகி விடும்.

மேலும் செய்திகள்