சாதனை பட்டியலில் எம்.எஸ்.தோனியை முந்திய பென் டக்கெட்
|இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே வெளிநாட்டு வீரரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 27 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்திய பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதில் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட், இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு செசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் எம்.எஸ். தோனியை முந்தி 2-வது இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே வெளிநாட்டு வீரரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பட்டியல்;-
1. வீரேந்திர சேவாக் - 133 ரன்கள்
2. பென் டக்கெட் - 114 ரன்கள்
3. எம்.எஸ்.தோனி - 109 ரன்கள்
4.கருண் நாயர் - 108 ரன்கள்
4. வீரேந்திர சேவாக் - 108 ரன்கள்.
மேலும் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.