< Back
கிரிக்கெட்
கெவின் பீட்டர்சனின் நீண்ட கால சாதனையை தகர்த்த பென் டக்கெட்

image courtesy;PTI

கிரிக்கெட்

கெவின் பீட்டர்சனின் நீண்ட கால சாதனையை தகர்த்த பென் டக்கெட்

தினத்தந்தி
|
17 Feb 2024 2:22 PM IST

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார்.

ராஜ்கோட்,

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் மற்றும் ஜடேஜாவின் அபார சதத்தின் மூலம் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 153 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணியில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 1 விக்கெட்டை இழந்து 38 ரன்களுடன் விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 139 பந்துகளிலேயே 150 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 2000-ம் ஆண்டுக்கு பின் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 150 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சக நாட்டு வீரரான கெவின் பீட்டர்சனின் நீண்ட கால சாதனையை தகர்த்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2012-ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் கெசின் பீட்டர்சன் 201 பந்துகளில் 150 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்து பென் டக்கெட் புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்;-

1. பென் டக்கெட் - 139 பந்துகள் - 2024-ம் ஆண்டு

2.கெவின் பீட்டர்சன் - 201 பந்துகள் -2012-ம் ஆண்டு

3. இன்சமாம் உல் ஹக் - 209 பந்துகள் - 2005-ம் ஆண்டு

4. ஒல்லி போப் - 212 பந்துகள் - 2024-ம் ஆண்டு

5. பிரண்டன் மெக்கல்லம்- 218 பந்துகள் - 2010-ம் ஆண்டு.

மேலும் செய்திகள்