< Back
கிரிக்கெட்
2024-25 ஆம் ஆண்டில்  இந்திய அணி விளையாடும் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ
கிரிக்கெட்

2024-25 ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ

தினத்தந்தி
|
20 Jun 2024 6:41 PM IST

வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன

சென்னை,

2024-25 ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் சர்வதேச போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. செப்டம்பரில் வங்காளதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையிடுகிறது.அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் செப்டம்பர் 19-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27-ம் தேதியும் தொடங்குகிறது. 3 டி20 போட்டிகள் தரம்ஷாலா, டெல்லி மற்றும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகள் முறையா புனே மற்றும் மும்பையில் நடைபெறவுள்ளது.

அதை தொடர்ந்து 2025-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்