ஒரே சீசனில் இரண்டு இரானி கோப்பை கிரிக்கெட் - இந்திய வாரியம்
|ஒரே சீசனில் இரண்டு இரானி கோப்பை கிரிக்கெட் நடத்தப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளூர் போட்டிக்கான அட்டவணையை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி ஒரே சீசனில் இரண்டு இரானி கோப்பை கிரிக்கெட் நடத்தப்படுகிறது. கொரோனா பரவலால் 2020-ம் ஆண்டு இந்த போட்டி நடத்தப்படாததால் அதற்கு ஈடுகட்டும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 2020-ம் ஆண்டு ரஞ்சி சாம்பியனான சவுராஷ்டிரா அணி இரானி கோப்பை கிரிக்கெட்டில் ரெஸ்ட் ஆப் இந்தியாவுடன் மோதும் ஆட்டம் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடக்கிறது. தற்போதைய ரஞ்சி சாம்பியன் மத்திய பிரதேச அணி, ரெஸ்ட் ஆப் இந்தியாவை அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி எதிர்கொள்கிறது.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் போட்டி தொடர் அக்டோபர் 11-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரையும், விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டிகள் நவம்பர் 12-ந்தேதி முதல் டிசம்பர் 2-ந்தேதி வரையும், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் டிசம்பர் 12-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரையும் நடைபெறுகிறது.