< Back
கிரிக்கெட்
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்

கோப்புப்படம்

கிரிக்கெட்

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்

தினத்தந்தி
|
11 Aug 2022 11:16 PM IST

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சூழலில் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த ஜூலை 30-ம் தேதி அறிவித்தது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா பாதிப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை. தற்போது அவர் முழு உடற்தகுதியை பெற்றுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அவர் ஜிம்பாப்வே தொடரில் விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:-

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.



மேலும் செய்திகள்