லக்னோ மைதானத்தில் பலத்த காற்றால் சரிந்த பேனர்
|லக்னோ மைதானத்தில் பலத்த காற்றால் பேனர் சரிந்து விழுந்தது.
லக்னோ,
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா- இலங்கை இடையிலான ஆட்டம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த ஆட்டம் மோசமான வானிலையால் இரு முறை பாதிக்கப்பட்டது.
இலங்கை பேட் செய்த போது, 32.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பிறகு இலங்கை இன்னிங்ஸ் முடியும் தருவாயில், இடி மின்னலுடன் திடீரென பலத்த காற்று வீசியது. காற்று சுழன்றடித்ததால் மணல் புழுதி கிளம்பியது. பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்தன.
மைதானத்தில் இருந்த ஒரு பெரிய பேனர் சரிந்து விழுந்தது. நல்லவேளையாக அந்த இடத்தில் ரசிகர்கள் இல்லாததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. மேற்கூரையில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் கிழிந்தன. ஆஸ்திரேலியாவின் பேட்டிங்குக்கு முன்பாகவும் காற்று, மழையால் ஆட்டம் தொடங்குவதில் அரைமணி நேரம் தாமதம் ஏற்பட்டது.