< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான வங்காளதேச அணி அறிவிப்பு - கேப்டன் யார் தெரியுமா..?

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான வங்காளதேச அணி அறிவிப்பு - கேப்டன் யார் தெரியுமா..?

தினத்தந்தி
|
14 May 2024 1:54 PM IST

டி20 உலகக்கோப்பை தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, இலங்கை, நெதர்லாந்து போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள வங்காளதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜேக்கர் அலி அனிக், தன்வீர் இஸ்லாம், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.

ரிசர்வ் வீரர்கள்; அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத்




மேலும் செய்திகள்