< Back
கிரிக்கெட்
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிப்பு

Image Courtesy: ICC Twitter 

கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Dec 2022 2:52 PM IST

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தப்போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் காயம் அடைந்த எபாடட் ஹொசைன் இந்தப்போட்டியில் இடம் பெறவில்லை. முதல் போட்டியில் இடம் பெறாத சுழற்பந்துவீச்சாளர் நசும் அகமது இந்த ஆட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி விவரம்:-

மக்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொமினுல் ஹக், யாசிர் அலி, முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், எஊருல் ஹசன், மெகதி ஹசன் மிராஸ், தைஜூல் இஸ்லாம், தஸ்கின் அகமது, கலீத் அகமது, ஜாகீர் ஹசன், ரெஜாவூர் ரஹ்மான் ராஜா, நசும் அகமது.

மேலும் செய்திகள்