< Back
கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் வங்காளதேச முன்னணி வீரர்

image courtey: ICC

கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் வங்காளதேச முன்னணி வீரர்

தினத்தந்தி
|
5 Aug 2024 12:42 PM IST

பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் மூலம் வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அகமது டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்ப உள்ளார். காயம் காரணமாக கடந்த 12 மாதங்களுக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் களம் காணாத இவரது வருகை நிச்சயம் வங்காளதேச அணிக்கு வலு சேர்க்கும்.

மேலும் செய்திகள்