சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்தார் வங்கதேச கேப்டன்
|வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
வங்கதேசம்,
2007-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடது கை தொடக்க பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய தமிம் இக்பால் தனது 34 வயதில் ஓய்வு முடிவை இன்று அறிவித்து உள்ளார்.
இவர் வங்கதேச அணியின் ஒருநாள் வடிவிலான அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார்.இந்நிலையில் திடீரென்று தனது ஓய்வு முடிவை அறிவித்து உள்ளார்.
இவரது தலைமையின் கீழ் வங்கதேச அணி 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 21 வெற்றிகளை பதிவு செய்து உள்ளது.
தற்போது சிறப்பாக விளையாடும் வீரர்களில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் தமிம் இக்பால் ஆவார்.
ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த பெருமை இவரிடம் தான் உள்ளது.இவர் வங்கதேச அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 14 சதங்கள் உட்பட 8313 ரன்கள் குவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் இவரது ஓய்வு முடிவு வங்கதேச ரசிகர்கள் இடையே பேரதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.
இவர் ஆடிய நாட்களில் சில முக்கிய தொடர்களை காயத்தால் தவறவிட்டுள்ளார்.நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் வங்கதேச அணி தோல்வியை தழுவியது.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 70 ஆட்டங்களில் 10 சதங்களுடன் 5134 ரன்கள் எடுத்துள்ளார். இவரது கடைசி டெஸ்ட் போட்டி அயர்லாந்துக்கு எதிரானது ஆகும். இவர் எற்கனவே கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.