< Back
கிரிக்கெட்
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசம், அயர்லாந்து அணிகள் தகுதி
கிரிக்கெட்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசம், அயர்லாந்து அணிகள் தகுதி

தினத்தந்தி
|
25 Sept 2022 2:38 AM IST

20 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.

அபுதாபி,

தென் ஆப்பிரிக்காவில் 10 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் நடக்கிறது.

இந்த போட்டிக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 2 அணிகளை முடிவு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

இதில் அபுதாபியில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் வங்காளதேச அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரைஇறுதியில் அயர்லாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வங்காளதேசம், அயர்லாந்து அணிகள் உலக போட்டிக்கு தகுதி அடைந்தன.

மேலும் செய்திகள்