'இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மோசமான ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டது' - மார்க் டெய்லர்
|இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமானது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்க் டெய்லர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிட்னி,
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் மோசமான ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது;-
"இந்தூர் ஆடுகளத்தை ஐ.சி.சி.நடுவர் மோசமானது என்று மதிப்பிட்டதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் முதல் 3 டெஸ்ட் போட்டிகள் நடந்த ஆடுகளங்களும் மோசமானதாகும். இந்த 3 ஆடுகளங்களில் இந்தூர் மிகவும் மோசமானதாகும். அதன் அடிப்படையில் தான் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி நடந்த பிரிஸ்பேன் ஆடுகளம் இருதரப்புக்கும் சமமானதாக இருந்தது. ஆனால் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நடப்பு டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகள் நடந்த ஆடுகளங்கள் முழுமையாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் 3-வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்."
இவ்வாறு மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.