< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
"பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும்" - பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்
|30 Oct 2022 3:39 AM IST
கேப்டன் பதிவிக்கான அழுத்தங்களில் இருந்து பாபர் அசாம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என கம்ரான் அக்மல் அறிவுரை வழங்கியுள்ளார்.
சிட்னி,
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 2 குரூப்களாக நடைபெற்று வரும் லீக் சுற்று வரும் நவம்பர் 6-ந்தேதி முடிவடையவுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலக வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் யூனிஸ் கான் மற்றும் கம்ரான் அக்மல் வலியுறுத்தியுள்ளனர்.
அதிரடி பேட்ஸ்மேனான பாபர் அசாம், சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆயிரம் ரன்கள் வரை குவிக்க வேண்டும் என்றால் கேப்டன் பதிவிக்கான அழுத்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என பாபர் அசாமுக்கு கம்ரான் அக்மல் அறிவுரை வழங்கியுள்ளார்.