< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு..? வங்காளதேசத்தின் கையில் ஆஸ்திரேலியாவின் தலைவிதி
|25 Jun 2024 1:43 AM IST
இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடக்கும் கடைசி லீக்கில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
செயின்ட் லூசியா,
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
சூப்பர்8 சுற்றில் ஆஸ்திரேலியா ஒரு வெற்றி, 2 தோல்வி என 2 புள்ளியுடன் இருக்கிறது. அந்த அணியின் தலைவிதி வங்காளதேசத்தின் கையில் இருக்கிறது.
அதாவது இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடக்கும் கடைசி லீக்கில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு முன்னேற வாய்ப்பு உண்டு.
மாறாக ஆப்கானிஸ்தான் வென்றால் அந்த அணி அரைஇறுதியை எட்டிவிடும். ஆஸ்திரேலியா மூட்டையை கட்டும்.