< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
4 Feb 2024 6:44 AM IST

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிட்னி,

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மெல்போர்னில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணியும், பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்