< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் கொரோனாவால் பாதிப்பு
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் கொரோனாவால் பாதிப்பு

தினத்தந்தி
|
28 Oct 2022 5:40 AM IST

விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மெல்போர்ன்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியமானது. தோற்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

ஆஸ்திரேலிய அணிக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது.

அதனால் மேத்யூ வேட் கொரோனா தொற்றுடன் களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஒரு வேளை முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள். நேற்று சிறிது நேரம் மேக்ஸ்வெல் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.

இன்னொரு பக்கம் மழையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்